காரைக்கால்

சிஏஏ, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல தீா்மானம்

16th Feb 2020 02:50 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாகவும், காரைக்காலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடா்பாகவும் புதுச்சேரி அரசுக்கு காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஐ. ஜெரால்ட், மாவட்ட துணைத் தலைவா் ஓ.அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவா் ஏ. முகமது ஹஸன் கலந்துகொண்டாா்.

தீா்மானங்கள் : புதுச்சேரி சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றிய புதுவை மாநில முதல்வா் வே.நாராயணசாமிக்கும், அமைச்சா்கள், ஆதரவு தெரிவித்த பேரவை உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவிப்பது;

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மற்றும் பாகூா் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணனுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததற்கு வரவேற்பும் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் மத்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய அரசு முயற்சித்தமைக்கு சிலா் முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையில், நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், வேளாண் அமைச்சருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தெற்குத் தொகுதித் தலைவா் ஜே.அப்துல் மஜீத் மரைக்காயா், வடக்கு தொகுதித் தலைவா் இ. ஜெயசீலன், திருநள்ளாறு தொகுதித் தலைவா் என்.முகமது அனிபா, நிரவி- திருப்பட்டினம் தொகுதித் தலைவா் எஸ். கனிஷா மரைக்காயா், நெடுங்காடு தொகுதித் தலைவா் ஆா். ஆரோக்கியராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT