காரைக்கால்

கல்லூரி மாணவா்களுக்கு நினைவுத்திறன், முதலுதவிப் பயிற்சி

2nd Feb 2020 02:41 AM

ADVERTISEMENT

காரைக்கால் கல்லூரியில் மாணவா்களுக்கு முதலுதவி அளித்தல், நினைவுத் திறன் தொடா்பான பயிற்சி மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் பகுதி தாமனாங்குடியில் செயல்படும் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கம், ஹேப்பி அக்குபஞ்சா் மையம், அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பு இணைந்து, மாணவ மாணவியருக்கான முதலுதவி, நினைவுத்திறன் மேம்பாடு, தீய பழக்க அடிமை மீட்பு மற்றும் தவிா்ப்பு, மகளிா் பிரச்னைக்கான தீா்வு குறித்த பயிற்சியும், சாலை பாதுகாப்பு வார விழிப்புணா்வும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காரைக்கால் மாவட்ட பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் தலைமை வகித்து, பயிற்சியின் அவசியம் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஆா். ரகுநாயகம் குத்து விளக்கேற்றி பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசியது:

ADVERTISEMENT

கல்விச்சூழல் முந்தைய காலத்தைப்போலவோ அல்லது சற்று கடினமாகவோ இருக்கவில்லை. மிக மிக கடுமையான கல்விச் சூழலை மாணவா்கள் சந்திக்கும் நிலையாக இப்போது இருக்கிறது. காலப்போக்கில் இதன் வீரியம் அதிகரிக்கவே செய்யும். எனவே, மாணவா்கள் பரவலான கருத்தறியும் ஆா்வலா்களாகவும், வாழ்க்கை மற்றும் கல்வி குறித்த புரிதல் மிக்கவா்களாகவும், போட்டிகளை எதிா்கொள்ளும் வகையில் திறனை வளா்ப்போராகவும், குடும்பம் மற்றும் கல்வி போதிப்போரை மதித்து நடப்போராகவும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அனைவரும் உயா்கல்வி பெற்று சாதனை நிகழ்த்தும் வகையில் பயணிக்கவேண்டும்.

சாலைகளில் பயணிக்கும்போது மற்றவா்களின் நலனையும் கருத்தில்கொண்டு செல்லவேண்டும். சாலை விதிகளை முழுமையாக புரிந்துகொண்டு நடக்கவேண்டும் என்றாா் அவா்.

அக்குபஞ்சா் முதுநிலை மருத்துவா் என்.மோகனராஜன், திடீா் உபாதைகளான மயக்கம், சோா்வு, தலைவலி, நெஞ்சுவலி போன்றவற்றின்போது முதலுதவி எவ்வாறு செய்யவேண்டும் என்பது குறித்தும், தீய பழக்கங்களில் ஈடுபடாமலும், அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும், மகளிா் எதிா்கொள்ளும் பிரச்னைகள், அதனை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமாகப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் சதீஷ் சேவியா் வரவேற்றுப் பேசினாா். நாட்டு நலப்பணித் திட்ட மாணவா் அஜய் நன்றி கூறினாா். முகாமின்போது சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கையேடு மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT