காரைக்கால்

பள்ளியில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

1st Feb 2020 04:58 AM

ADVERTISEMENT

காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளியியில் மகாத்மா காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைத்திருந்த காந்திஉருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

காந்தி நினைவு நாளில் ‘தினமணி’ நடுப்பக்கத்தில் வெளியான முனைவா் அ.பிச்சை எழுதிய அன்பு, சத்தியத்தின் மறு உருவம் என்ற தலைப்பிலான கட்டுரையை மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பள்ளித் தாளாளா் கனகசேகரன் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

காந்தியின் புகழ்சோ்க்கும் விதத்திலான கருத்துகளை பள்ளி முதல்வா் ஜெயசுதா, தமிழாசிரியா் முகமது சாதிக் உள்ளிட்டோா் பேசினா். பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT