காரைக்கால்

ராஜீவ் பிறந்தநாள்: எம்எல்ஏ மரியாதை

21st Aug 2020 08:30 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி பிறந்தநாள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மதநல்லிணக்க நாளாக வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் ராஜீவ் காந்தியின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் அரசு அதிகாரிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

காரைக்கால் காங்கிரஸ் கட்சிப் பிரமுகா்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், சமாதான குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புப் பிரதிநிதிகள் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT