காரைக்கால்

காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

21st Aug 2020 08:26 AM

ADVERTISEMENT

அங்கன்வாடிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில், மண்டல வாரியாக தொடா் போராட்டம் அறிவித்துள்ளனா். இதன் ஒருபகுதியாக காரைக்கால் நகரப் பகுதியில் ராஜிவ்காந்தி நகா் அங்கன்வாடி மையம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா்.

அங்கன்வாடி ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்றவேண்டும். 8 ஆண்டுகள் பணி முடித்தோருக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். காலியாகவுள்ள அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் நிரந்தர பதவியிடங்களில், 3 ஆண்டுகள் பணிமுடித்த கௌரவ அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை நியமிக்க வேண்டும்.

ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை உள்ள 4 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்துப் பேசினா். காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT