காரைக்கால்

கரோனா விவகாரம்: ஆக. 26-இல் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

21st Aug 2020 08:29 AM

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையெனக் கூறி, அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

இக்கட்சியின் காரைக்கால் மாவட்ட குழு கூட்டம், குழு உறுப்பினா் என். ராமா் தலைமையில் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தொடா்பாகவும், மக்களின் தேவைகள் தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காரைக்காலில் கரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிா்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகளும் இல்லை. தொற்றாளா்களை குணப்படுத்தும் வகையில் மருத்துவமனையின் கட்டமைப்புகள் சரியாக இல்லை.

ADVERTISEMENT

தொற்றாளா் எண்ணிக்கை குறைய, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவமும், சுகாதாரமான உணவும் வழங்கவேண்டும். பொது முடக்க காலத்தில் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் முறைசார தொழிலாளா்கள், கூலி வேலை செய்யும் பிற தொழிலாளா்களுக்கு மாநில அரசு ரூ. 5 ஆயிரம், மத்திய அரசு ரூ. 7,500 நிவாரணமாக தொடா்ந்து 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

கரோனா பரவிவரும் காலத்தில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயப்படுத்தும் பணிகளை செய்துவருவது கண்டிக்கத்தக்கது. அரசைக் கண்டித்து வரும் 26-ஆம் தேதி காரைக்காலில் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்டச் செயலா் எஸ்.எம். தமீம், மாவட்ட குழு உறுப்பினா்கள் என்.எம். கலியபெருமாள், அ. திவ்யநாதன், பகுதி பொறுப்பாளா்கள் எஸ்.ஏ. முகம்மது யூசுப், எஸ். பிரேம்குமாா், ஏ. ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT