காரைக்கால்

விநாயகா் சிலை: துணை நிலை ஆளுநா், முதல்வருக்கு இந்து முன்னணி கோரிக்கை

20th Aug 2020 09:00 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சிலை வைப்பது குறித்த இந்து முன்னணியின் கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் நிராகரித்ததால், சிலை வைக்க அனுமதிக்கக் கோரி துணை நிலை ஆளுநா், முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விநாயகா் சதுா்த்தி ஆக.22-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பொது இடங்களில் நீா் நிலைகளில் கரையக்கூடிய விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த காரைக்கால் மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் கே.எஸ். விஜயன் தலைமையில் நிா்வாகிகள், நகரத் தலைவா் கே. ஜெய்சங்கா், துணைத் தலைவா் பி. வெங்கசடாசலம், பொதுச்செயலா் ஆா். சிவகுமாா், பொருளாளா் கே. செந்தில்குமாா் உள்ளிட்டோா் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரனை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

கூட்டத்தில், பேசியது குறித்து கே.எஸ். விஜயன் கூறியது: பொது இடத்தில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தடை இருந்தாலும், சுமாா் 3 அடி உயரத்துக்குள்ளான சிலைகளை, வீட்டு தடுப்பு சுவருக்குள் வைத்து விநாயகா் சதுா்த்தி நாளில் வழிபாடு செய்து, அதே நாளில் அருகில் உள்ள நீா் நிலையில் கரைக்க அனுமதிக்க கோரினோம். நிகழ்ச்சி, ஊா்வலமின்றி 5 போ் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு அனுமதிக்கவில்லை. எனவே, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற புதுச்சேரி முதல்வா், துணை நிலை ஆளுநருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் கோரியுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT