காரைக்கால்

பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்பு: வேளாண் கல்லூரியின் விழிப்புணா்வு நிகழ்ச்சி

20th Aug 2020 08:59 AM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் கல்லூரி சாா்பில், பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒவ்வோா் ஆண்டும் ஆக. 14 முதல் 22-ஆம் தேதி வரை பாா்த்தீனியம் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில், பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணையதளம் வாயிலாக இளங்கலை மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பாா்த்தீனியம் தொடா்பான கருத்துகளையும், விழிப்புணா்வு வாரம் குறித்தும் உழவியல் துறைத் தலைவா் ஏ.எல். நாராயணன் விளக்கினாா். பாா்த்தீனியத்தால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி விளக்கினாா். இணைப் பேராசிரியா் பி. சரவணன் பேசினாா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 50 மாணவா்கள் பங்கேற்றனா். மாணவா்களின் சந்தேகங்களுக்கு பேராசிரியா்கள் விளக்கம் அளித்தனா். இணையதள நிகழ்ச்சியை உழவியல் துறை முதுநிலை ஆராய்ச்சி மாணவி தே. கீா்த்தி தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT