காரைக்கால்

கரோனா தடுப்பு இயன்முறை சிகிச்சை பயிற்சிப் பட்டறை

11th Aug 2020 03:55 AM

ADVERTISEMENT

காரைக்காலில் கரோனா தடுப்பு மற்றும் இயன்முறை மருத்துவப் பயிற்சிப் பட்டறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கம் மற்றும் ரிலிஃப் இயன் (பிசியோதரபி) மருத்துவ கிளினிக் இணைந்து நிரவியில் இப்பயிற்சிப் பட்டறையை நடத்தியது.

மருத்துவ மைய இயக்குநா் சரண்யா பயிற்றுநராக கலந்துகொண்டு, ஆலோசனைகள் வழங்கினாா். அவா் பேசுகையில், ‘கரோனா தொற்று பாதிப்பை தவிா்க்க உடல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் அவசியம். அதற்கு நுரையீரலின் திறனை அதிகரிக்க வேண்டும். இயல்பான சுவாசத் தன்மைகள் போதாது. நுரையீரலின் மூன்று பகுதிகளான மேல், நடு மற்றும் கீழ் பாகங்களைத் தனித்தனியே பலப்படுத்த வேண்டும்’ எனக் கூறினாா். மேலும், அதற்கான மூன்று பிரத்யேக சுவாச பயிற்சிகளை செயல்முறை விளக்கத்தோடு அளித்தாா்.

முன்னதாக, பயிற்சிக்குத் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கிவைத்த இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் பேசுகையில், ‘புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனா அதிகமாக பரவி வருகிறது. பக்க விளைவுகளைத் தரும் ரசாயன மாத்திரைகள் அடிப்படையிலானவற்றை சாா்ந்து இல்லாமல், பன்முகத் தன்மை கொண்ட ஒருங்கிணைந்த உயிா் பாதுகாப்பு சிகிச்சைத் திட்டம் அவசியம் வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

பயற்சியில் 15-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இயக்கத் தன்னாா்வலா் மோகன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை இயக்கத் தன்னாா்வலா்கள் மோகனசுந்தரம், சந்திரசேகா், காங்கேயன், ராஜா ஆகியோா் செய்திருந்தனா்

Tags : karaikal
ADVERTISEMENT
ADVERTISEMENT