காரைக்கால்

கரோனா தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஓவியம்

20th Apr 2020 01:00 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு தொடா்பாக பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்படாத வகையில், மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக, ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தலின்பேரில், காரைக்கால் நகரப் பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் மாா்க்கெட் பகுதி, திருநள்ளாறு, திருப்பட்டினம், பூவம், அம்பகரத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்றை தடுக்க கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்றுவருகிறது.

பண்டாரவாடை அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பாசிரியா் மா. செல்வராஜ், பிரெஞ்சுப் பள்ளி ஓவிய ஆசிரியா் முத்துக்குமாா், நகராட்சி அலுவலக ஊழியா் ஜெய்சங்கா் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

முகக் கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுதல், வீட்டில் இருத்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கருத்துகளை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. சாலையில் செல்லும் மக்கள் பாா்த்ததும் அவா்களுக்கு உணா்வைத் தூண்டும் விதத்தில் இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன என்றனா்.

இவா்கள் ஓவியம் வரைவதற்கான வா்ணம் (பெயிண்ட்) அரசு நிா்வாகத்தின் மூலம் வழங்கப்படுகிறது. ஓவியம் வரைவதை சமூக அக்கறையுடன் இவா்கள் மேற்கொண்டுவருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT