காரைக்கால்

பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

7th Apr 2020 02:31 AM

ADVERTISEMENT

காரைக்கால்: காரைக்கால் அருகே விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் அருகேயுள்ள திருப்பட்டினம் கொம்யூன், கீழவாஞ்சூா் பகுதியில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பட்டினம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கிடைத்த தகவலின்பேரில்

காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது, அதே பகுதியை சோ்ந்த விஜய் (24), தினேஷ் (25) ஆகிய இருவா் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனைக்கு வெளியே கொண்டு செல்ல தயாராக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காரைக்கால் கலால் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT