காரைக்கால்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு மானியம்

13th Sep 2019 06:25 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு புதன்கிழமை மானியம் வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், புதுவை குடிசை மாற்று வாரியத்தின் மூலம்  அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், திருநள்ளாறு தொகுதிக்குள்பட்ட பயனாளிகளுக்கு  மானியம்  வழங்கும் நிகழ்ச்சி சேத்தூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதில், வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கலந்துகொண்டு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 2 மற்றும் 3-ஆம் தவணையாக 52 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்துக்கான   ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  புதுவை குடிசை மாற்று வாரியத்தின் உதவி பொறியாளர் சுதர்ஷன், இளநிலைப் பொறியாளர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT