காரைக்கால்

நாளை திருமலை சீனிவாசப் பெருமாள் ஊஞ்சல் உத்ஸவம்

7th Sep 2019 08:57 AM

ADVERTISEMENT

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) திருமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் பகவான் பக்த ஜன சபா சார்பில் ஏற்கெனவே 3 முறை திருமலை திருப்பதி தேவஸ்தான  ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் காரைக்கால் வரவழைக்கப்பட்டு, ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது. தற்போது 4-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை காரைக்காலில் ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறவுள்ளது. இதற்காக சனிக்கிழமை  இரவு 7 மணிக்கு திருமலையிலிருந்து பெருமாள் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருள்கிறார்.
உத்ஸவத்தையொட்டி, அம்மையார் குளத்தின் மேற்கு கரைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்தருளச் செய்யப்படுகிறார். தொடர்ந்து, காலை 5 மணிக்கு சுப்ரபாத சேவையும், 7 மணிக்கு திருமஞ்சன சேவையும், 8.45 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் தோமாலை சேவையும் நடைபெறவுள்ளது.
பின்னர், மாலை 5 முதல் இரவு 9 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக  சீனிவாசப் பெருமாள் ஊஞ்சலில் சேவை சாதிக்கவுள்ளார். காரைக்கால் மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்யும் வகையில், குளக்கரையில் வசதிகள் செய்யப்பட்டுவருகிறது. பக்தர்களை ஒழுங்குப்படுத்தி, தரிசனத்துக்குச் செல்ல காரைக்கால் மாவட்ட போலீஸார், தன்னார்வலர்கள் குழுவினர் ஈடுபடவுள்ளதாக பகவான் பக்த ஜன சபா தரப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT