காரைக்கால்

சிவபெருமான் பிட்டுக்கு  மண் சுமந்த உத்ஸவம்: நாளை நடைபெறுகிறது

7th Sep 2019 08:57 AM

ADVERTISEMENT

சிவபெருமானின் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை விளக்கும் வழிபாடு, காரைக்கால் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை  (செப்டம்பர் 8) நடைபெறவுள்ளது.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிவ தலங்களில் ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த உத்ஸவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி, அம்பாள் சின்னக்கண்ணு செட்டித் தெருவில் உள்ள வாய்க்காலுக்கு எழுந்தருளி, அங்கு சிறப்பு பூஜைகள் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்த கோலத்தில்,  அலங்கார ரதத்தில் வாய்க்காலுக்கு எழுந்தருளச் செய்யப்படும்.
இதேபோல், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத  ஜடாயுபுரீசுவரர் கோயிலிலும் உத்ஸவம் நடைபெறவுள்ளது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் பெரியத்தெரு மேற்கே உள்ள வாய்க்காலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இந்த இரண்டு கோயில்களின் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT