காரைக்கால்

வணிகர்கள் கவனத்துக்கு...

4th Sep 2019 07:05 AM

ADVERTISEMENT

காரைக்கால் வணிக நிறுவனத்தினர் தொழில் உரிமை பெறுதல், புதுப்பித்தல் பணியை செய்துகொள்ள வேண்டும் என காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் அறிவுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் வணிகம் செய்யும் பெரும்பாலான வணிகப் பெருமக்கள், தங்கள் வணிக நிறுவனங்களுக்குரிய தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமலும் இருப்பது நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் (10.9.2019 முடிய) தங்கள் வணிக நிறுவனங்களுக்குரிய உரிமம் பெறுமாறும், புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி, தங்கள் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு, அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT