காரைக்கால்

தடையில்லா மின்சாரம் வழங்க நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்

4th Sep 2019 07:07 AM

ADVERTISEMENT

திருப்பட்டினம் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் ஐநூற்று விநாயகர் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கௌரவத் தலைவர் எஸ். கணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பள்ளிகள், பயிற்சி மையங்களில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டங்கள் விரிவாக நடத்தப்படும்.  திருப்பட்டினத்தில் அடிக்கடி பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிப்படுகிறார்கள். இதை போக்கும் வகையியில் மின்துறை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காந்தி சாலையில் சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிழக்குப் புறவழிச் சாலையில் செல்லும் பேருந்துகளை திருப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பட்டினம் காந்தி பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்த சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்டோருக்கு சங்கம் நன்றி தெரிவிப்பதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக சங்கத் தலைவர் வை. ராஜேந்திரன் வரவேற்றார். செயலர் வி. சுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜி. ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிறைவாக இணைச் செயலர்  கணேசன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT