காரைக்கால்

செப்.6-இல் சித்தர் சித்தானந்த சுவாமிகள் குரு பூஜை தொடக்கம்

4th Sep 2019 07:04 AM

ADVERTISEMENT

அக்கரைவட்டம் பகுதியில் சித்தர் சித்தானந்த சுவாமிகள் குரு பூஜை செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்குகிறது.
காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதியில் சிவசித்தர் சித்தானந்த சுவாமிகள் மடம் உள்ளது. 105-ஆவது மகா குரு பூஜை விழா செப்டம்பர் 6-ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. பகல் 11 மணியளவில் திருவிளக்கு வழிபாடும், மாலை சிவசித்தர் மகா ஹோமம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக செப்டம்பர் 7-ஆம் தேதி காலை  திருமலைராஜனாற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குட ஊர்வலம் குரு பூஜை நடைபெறுமிடத்துக்கு செல்லும் வழிபாடும், பகல் 11 மணியளவில் சித்தரின் பீடத்திற்கு அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, அன்னதானம், இரவு 7 மணிக்கு சித்தானந்த சுவாமிகள் வீதியுலா நடைபெறவுள்ளது.
பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் இந்த குரு பூஜையில் பங்கேற்பர். அன்னதானம் (மதிய உணவு) ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. விமரிசையாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோமநாதசுவாமி கோயில் அறங்காவல் வாரியத்தினர், கிராமத்தினர் செய்துவருகின்றனர்.
இதுகுறித்து, கிராமத்தினர் கூறியது: கடந்த ஆண்டு குரு பூஜை விழாவில் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி பங்கேற்றார். நிகழாண்டும் முதல்வருக்கு அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் வழிபாட்டில் பங்கேற்பார்கள் என கூறினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT