காரைக்கால்

காரைக்காலில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்

4th Sep 2019 07:06 AM

ADVERTISEMENT

காரைக்கால் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த  50 விநாயகர் சிலைகள் புதன்கிழமை (செப்டம்பர் 4) கடலில் கரைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவரும்,  ஸ்ரீ சக்தி விநாயகர் மத்தியக் கமிட்டி அமைப்பாளருமாகிய கே.எஸ்.விஜயன் கூறியது: காரைக்கால் இந்து முன்னணி சார்பில், கோயில்பத்து ஏழை மாரியம்மன் கோயில் வாயிலில் சக்தி விநாயகர், விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 2-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கியது. 
2 நாள்களும் மாலை வேளையில் திருமுறை, வேத பாராயணம், சமய சொற்பொழிவு நடைபெற்றது. புதன்கிழமை (செப்டம்பர் 4) பகல் நேரத்தில் காரைக்கால் நகரப் பகுதியில் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த 49 விநாயகர் சிலைகளும் ஏழை மாரியம்மன் கோயிலில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிற்பகல் 2 மணியளவில் 50 விநாயகர் சிலைகள் கிளிஞ்சல்மேடு  கடற்கரைக்கு பல்வேறு இசை முழக்கங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன. காரைக்கால் நகரப் பகுதியில் வழிபாட்டில் உள்ள விநாயகர் சிலைகளின் பொறுப்பாளர்களுக்கு, குறித்த நேரத்தில் ஒருங்கிணைப்பு இடத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
இதுதவிர, திருமலைராயன்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகளில் 12 சிலைகள் செவ்வாய்க்கிழமை ஆற்றில் கரைக்கப்பட்டன. 2 சிலைகள் மட்டும் புதன்கிழமை கரைக்கப்படவுள்ளன என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT