காரைக்கால்

கராத்தே: காரைக்கால் இரட்டை  சிறார்களுக்கு சாதனையாளர் விருது

4th Sep 2019 07:06 AM

ADVERTISEMENT

கராத்தேயில் சிறந்து விளங்கும் காரைக்காலை சேர்ந்த இரட்டை சிறார்களுக்கு தனியார் அமைப்பு சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.
காரைக்காலில் செயல்படும் இன்டர்நேஷனல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமியில் ஏராளமானோர் கராத்தே பயிற்சி பெறுகின்றனர். நிறுவன இயக்குநர் வி.ஆர்.எஸ். குமாரிடம் 3 வயது முதல் கராத்தே, சிலம்பம், யோகா கிக் பாக்ஸிங், குபுடோ, டேக்வாண்டோ போன்ற பல தற்காப்புக் கலைகளை, காரைக்கால் குட்ஷெப்பெர்டு ஆங்கிலப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான கே. ஸ்ரீவிசாகன், கே. ஸ்ரீஹரினி ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் இந்தியாவின் பல இடங்களில் நடந்த போட்டிகளிலும், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று வருகின்றனர்.
இரட்டையர்களின் சாதனைகளை விளக்கி அவர்கள் பயிலும் பள்ளி நிர்வாகம், புத்தகத்தை தயார் செய்தது. இதை  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி  வெளியிட்டு சிறப்பித்தார். சிறார்களின் சாதனைகளை அறிந்த வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்டு ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பு, மாணவர்கள் பெற்ற சான்றிதழை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, உலககிலேயே 9 வயதுக்குள்பட்ட இரட்டையர்கள் இவ்வாறான சாதனை படைத்தது பெருமைக்குரியதாகக் கருதி, உலக சாதனையாளர் விருது வழங்க முன்வந்தது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்டு  ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் கலைவாணி மற்றும் முதன்மைச் செயலாளர் தஹ்மிதா, ஒருங்கிணைப்பாளர் ரியாசுதீன் ஆகியோர் கலந்துகொண்டு இரட்டையர்களுக்கு சாதனையாளர் விருதை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். இவ்விழாவில் அகாதெமி நிறுவனரும், தலைமைப் பயிற்சியாளருமான  வி.ஆர்.எஸ். குமார் மற்றும் கராத்தே பயிற்சி பெறும் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT