காரைக்கால்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

4th Sep 2019 07:08 AM

ADVERTISEMENT

அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில், மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தும் முன்பாக பள்ளிகள் அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தி, சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சியில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகள் அளவிலான சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு அறிவியல் மாதிரிகளை வைத்து விளக்கினர். முன்னதாக, கண்காட்சியை பள்ளி துணை முதல்வர் ராஜசேகர் தலைமையில் மூத்த தமிழாசிரியர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.  பள்ளி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், கண்காட்சியில் பங்கேற்காத மாணவர்கள் பார்வையிட்டு, அறிவியல் மாதிரிகள் குறித்து விளக்கத்தை கேட்டறிந்தனர். பள்ளியின் நடுவர் குழுவினர் சிறந்த மாதிரிகளைத் தேர்வு செய்து, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT