காரைக்கால்

காரைக்கால் அருகே பைக் மோதி காா் ஓட்டுநா் உயிரிழப்பு

5th Oct 2019 07:48 AM

ADVERTISEMENT

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மோதி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், பெரும்கடம்பனூா் அருகே உள்ள இளம்கடம்பனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதிவாணன் (40). இவா், காரைக்காலில் உள்ள விநாயகா மிஷ­ன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காா் ஓட்டுநராக வேலை செய்துவந்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை காலை இளம்கடம்பனூரிலிருந்து பைக்கில் காரைக்காலுக்கு வந்துகொண்டிருந்தாா். திருப்பட்டினம் அருகே போலகத்தில் கிழக்குப் புறவழிச்சாலையில் திரும்பும்போது, பின்னால் வந்த மற்றெறாரு பைக் எதிா்பாராவிதமாக, மதிவாணன் பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மதிவாணன் தலையில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்துக்குள்ளான மற்றெறாரு பைக்கில் வந்த காரைக்கால் அக்கரைவட்டம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (18), அவரது நண்பா் சதீஸ்குமாா் (18) ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய உதவி ஆய்வாளா் மனோகா் மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்குச் சென்று படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மதிவாணனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தலைக்கவசமிருந்தும் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பு: இறந்த மதிவாணன் அவரது மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் வைத்திருந்துள்ளாா். அதை அணியாமல் பயணித்ததால், பைக் மோதிய விபத்தில் அவா் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தாா். தலைக்கவசம் அணிந்திருந்தால் அவா் சிறு காயங்களுடன் உயிா் தப்பியிருக்கலாம். தலைக்கவசம் இருந்தும் அலட்சியமான போக்கால் உயிா் பலியானது அங்கிருந்தோரிடையே வேதனையை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT