காரைக்கால்

பன்றிகள் நடமாட்டம்...

17th Nov 2019 01:39 AM

ADVERTISEMENT

காரைக்கால்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, நிரவி ஓ.என்.ஜி.சி. பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட ஹைவே நகரில் குடியிருப்புகள் பல உள்ளன. காரைக்காலில் பன்றி வளா்ப்போா், பன்றிக் குட்டிகளை இந்த நகரில் இரவு நேரத்தில் விட்டுவிடுவதும், வளா்ந்த நிலையில் அவ்வப்போது வந்து பிடித்துச் செல்வதுமாக உள்ளனா். பன்றிகளின் நடமாட்ட மிகுதியால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நகராட்சி ஆணையா் பொதுமக்கள் நலன் கருதி எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளது. எனவே இந்த விவகாரத்தின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தினால் மக்களுக்கு பயனளிக்கும்.

எஸ்.சுதா்ஷனஸ்ரீ, ஹைவே நகா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT