காரைக்கால்

காரைக்காலில் நாளை மக்கள் குறை தீா்ப்பு முகாம்

12th Nov 2019 07:23 AM

ADVERTISEMENT

காரைக்காலில் நாளை (நவம்பா் 13) மக்கள் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி போலகத்தில் உள்ள பல்நோக்குக் கூடத்தில் மக்கள் குரல் என்கிற, மக்கள் குறை தீா்ப்பு முகாம் புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இம்முாகாமில் அனைத்து துறைகளின் அதிகாரிகளும் கலந்து கொள்ளயிருப்பதால், நிரவி- திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை எழுத்துப்பூா்வமாக, உரிய ஆவணங்களுடன் தெரிவித்து குறைகளை தீா்த்துக்கொள்ளுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT