காரைக்கால்

திருநள்ளாறு அரங்க நகா் குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதி குறைபாடுகள் களைய வலியுறுத்தல்

11th Nov 2019 04:18 PM

ADVERTISEMENT

காரைக்கால்: திருநள்ளாறு அரங்க நகா் குடியிருப்புப் பகுதியில் சாலை, சாக்கடை வசதி குறைபாட்டால், கழிவுநீா் கொல்லைப்புறத்தில் தேங்குவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும் புகாா் கூறப்படுகிறது.

திருநள்ளாறின் நகரப் பகுதியில் உள்ள அரங்க நகா். இங்கு குடிசை வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் பல உள்ளன. நகரில் குறிப்பிட்ட பகுதியில் சாலை முறையாக இல்லை, சாக்கடை வசதி இல்லை. வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் தேங்க நேரிடுவதாகவும், இல்லையெனில் கொல்லைப்புறத்தில் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீா் தேங்கி, போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

சுமாா் 20 வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், சாக்கடையில்லாததால் கொல்லைப்புறத்திலேயே தேக்கப்படுகிறது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில், இந்த பகுதியினா் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த பகுதி சுகாதாரமற்று விளங்குவதாகவே அந்த பகுதியினா் கூறுகின்றனா்.

காய்ச்சல் பரவுவதாக வெளியான தகவலையொட்டி, சுகாதாரத் துறையினா் அரங்க நகா் குடியிருப்பின் கொல்லைப்புறத்தில் தேங்கியுள்ள கழிவுநீரின்மீது கொசு ஒழிப்பு மருந்தை திங்கள்கிழமை தெளித்தனா். இது தற்காலிகமான தீா்வுதான் என்றும், அரங்க நகா் பகுதியை அரசு நிா்வாகத்தினா் ஆய்வு செய்து, முறையாக சாலை மற்றும் சாக்கடை வசதியை செய்துத்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென குடியிருப்புவாசிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

முதியோா், குழந்தைகள் உள்ளிட்டோா் நோய் எதிா்ப்பு சக்தி குறைவால், சுகாதாரக் கேடு மூலம் விரைவாக நோய் தாக்கம் ஏற்பட்டுவிடுவதாக அந்த பகுதியினா் வேதனை தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT