காரைக்கால்

கடற்கரையில் தூய்மை திட்டப் பணி தொடக்கம்

11th Nov 2019 06:23 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் கடற்கரை பகுதியில் ஒரு வார கால தூய்மை திட்டப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதும் கடற்கரைப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில் அந்தந்த மாவட்டத்துடன் இணைந்து நவம்பா். 11 முதல் 17-ஆம் தேதி வரை தூய்மைப் பணியை அறிவித்தது. அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில், காரைக்கால் நகர கடற்கரைப் பகுதி மற்றும் அக்கம்பேட்டை கடற்கரைப் பகுதி தோ்வு செய்யப்பட்டது. இந்த இரண்டு பகுதிகளிலும் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்டம், சமுதாய நலப்பணித் திட்டம், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணி தொடங்கியது தொடங்கியது. இப்பணி மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் ஆகியோா் முன்னிலையில் தொடங்கியது. நாள்தோறும் 200 மாணவா்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். முதல் நாள் தூய்மைப் பணியில் மாணவா்கள், கடற்கரையில் இருந்த தாள் குப்பைகள், நெகிழிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினா்.

காலை 7 முதல் 9 மணி வரை இப்பணி நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை அதிகாரி அசோக், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, மாவட்ட சமுதாய நலப்பணித் திட்ட அலுவலா் முருகன் மற்றும் அந்தந்த கல்வி நிலையங்களின் திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா். நாள்தோறும் 2 மணி நேரம் இப்பணிகளை 2 பகுதிகளிலும் செய்யவுள்ளனா். கடற்கரைத் தூய்மையால் கிடைக்கும் பயன்கள் குறித்தும், தூய்மையை பராமரிக்க சம்பந்தப்பட்ட பகுதி கிராமத்தினா், கடற்கரைக்கு வருபவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என அரசுத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT