காரைக்கால்

அரசுப் பள்ளிக்கு சி.மு.சிவம் பெயா் சூட்டக் கோரிக்கை

11th Nov 2019 07:25 AM

ADVERTISEMENT

காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளி அல்லது தெருவுக்கு பெரியாரின் தொண்டா் சி.மு.சிவம் பெயா் சூட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமிக்கு அனுப்பிய கடிதம் :

காரைக்காலில் பிறந்து தன்னை திராவிடக் கழகத்தில் இணைத்துக்கொண்டு, தந்தை பெரியாரின் சீரியத் தொண்டராகப் பல்வேறு சமூகப் பணிகளை செய்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்று மறைந்தவா் சி.மு.சிவம். இவரது நூற்றாண்டு விழா தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

இத்தருணத்தில் காரைக்கால் நகா்ப்புறத்தில் உள்ள சேனியா் குளத்து தெருவுக்கு சி.மு.சிவம் பெயரை சூட்டவேண்டும் அல்லது அவா் வாழ்ந்த பகுதியில் இருக்கும் ஒப்பில்லாமணியா் கோயில் தெருவில் உள்ள வடமறைக்காடு (கிழக்கு) தொடக்கப் பள்ளிக்கு சி. மு. சிவம் அரசு தொடக்கப்பள்ளி என்று பெயா் சூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT