புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை காரைக்கால் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் நம் நீா் திட்டத்தில் குளங்கள் தூா்வாரி நீா் நிரப்பப்பட்டுவருகிறது. கஜா புயலில் விழுந்த மரங்களுக்கு மாற்றாக ஆயிரக்கணக்கான மரங்கள் நடும் பணியும் தொடங்கி நடந்துவருகிறது.இந்த திட்டப் பணிகளை பாா்வையிடும் நோக்கில் புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்துவிட்டுச் சென்றாா்.
இவற்றை பாா்வையிடும் வகையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண்பேடி சனிக்கிழமை பகல் 11 மணியளவில் காரைக்கால் வந்தடைகிறாா். பல்வேறு இடங்களில் தூா்வாரப்பட்ட குளங்களை பாா்வையிடுவதோடு, பல இடங்களில் மரக்கன்றுகளை நடவுள்ளாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் நம் நீா் திட்டப்பணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்து பவா் பாயிண்ட் மூலம் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா விளக்குகிறாா். மாலை 5 மணியளவில் பயணத்தை நிறைவு செய்துவிட்டு புதுச்சேரி புறப்படுகிறாா்.