காரைக்கால்

மனைவியை தாக்கிய கணவர் கைது

31st Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

குடும்பத் தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
காரைக்கால் தோமாஸ் அருள்வீதி பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ராஜ்குமார் (40) , வனிதா (35). கணவர் சரியாக வேலைக்கு செல்வதில்லை என்பதால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் ஏற்பட்ட தகராறின்போது  ராஜ்குமார் வனிதாவை தாக்கினாராம். இதுகுறித்து வனிதா காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT