காரைக்கால்

பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

31st Jul 2019 07:11 AM

ADVERTISEMENT

காரைக்காலில் பாஜக இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைப் பணி அண்மையில் தொடங்கியது. பல்வேறு நிலை நிர்வாகிகள் புதிய உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாஜக இளைஞரணி சார்பில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, செருமாவிலங்கையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி வாயிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இளைஞரணி மாநில பொறுப்பாளர் (உறுப்பினர் சேர்க்கை)  ஆனந்தன், மாநிலச் செயலர் வேலு, மாநில துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.
இளைஞரணி பொதுச் செயலர் செந்தில்அதிபன், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஜி. கணேஷ் , நெடுங்காடு தொகுதி தலைவர் பிரகாஷ், நிரவி தொகுதி தலைவர் பாலா, வடக்குத் தொகுதி தலைவர் அருண்குமார், திருநள்ளாறு தொகுதித் தலைவர் ஞான சம்மந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கைப் பணி தீவிரமாக நடந்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT