காரைக்கால்

"யூனியன் பிரதேசங்களில் ஆளுநரை வைத்து மத்திய அரசு ஆதிக்கம்'

30th Jul 2019 07:03 AM

ADVERTISEMENT

யூனியன் பிரதேசங்களில் ஆளுநரை வைத்து மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது என்று தவ்ஹீத் பேரவை கூறியுள்ளது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை தவ்ஹீத் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரவைத் தலைவர் ஜெ. முகம்மது கௌஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுல்ஆபிதீன் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கை தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல், மதத்தின் பெயராலும், மாட்டின் பெயராலும் ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் நடைபெறும்  குழுத் தாக்குதல், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சமீப கால நடவடிக்கைகள் சிறுபான்மை மக்களை பாரபட்சமாக தீவிரவாதிகள் போல சித்தரிப்பது கண்டனத்துக்குரியது. என்ஐஏவுக்கு  கூடுதல் அதிகாரம் தரும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கைவிடப்படவேண்டும், முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மற்றும் அனைத்துப் பிரிவு உலமாக்களின் ஆலோசனைகளைப் பெற்று சட்டம் இயற்ற வேண்டுமே தவிர, அரசு தன்னிச்சையாக மத விவகாரங்களில் தலையிடக்கூடாது, பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை கூட்டம் கண்டிக்கிறது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் துணை நிலை ஆளுநரை வைத்து மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவது  தவறானது, நாட்டின் பிற யூனியன் பிரதேசங்களின் நிலையும் இவ்வாறு இருப்பது கண்டனத்துக்குரியது.
காரைக்காலில் உள்ள சாலைகள் முழுமையாக சீரமைக்க வேண்டும், காரைக்கால் நேரு மார்க்கெட் கட்டுமானத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஏ.எஸ். அலாவுதீன், மாநிலச் செயலர் எம். யாசர் அராபத் உள்ளிட்டோர் 
கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT