காரைக்கால்

மாங்கனித் திருவிழாவையொட்டி பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் மேளா

18th Jul 2019 12:21 AM

ADVERTISEMENT


காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி 2 நாள் பி.எஸ்.என்.எல். 4ஜி சிம் மேளா நடைபெற்றது.
காரைக்கால் மாங்கனித் திருவிழாவையொட்டி பி.எஸ்.என்.எல்.  மற்றும் தேசிய தொலைத்தொடர்பு சங்க ஊழியர் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை 4ஜி சிம் மேளாவை நடத்தியது. இதை பி.எஸ்.என்.எல். தஞ்சை-குடந்தைக் கோட்ட முதன்மைப் பொதுமேலாளர் சி.வி. வினோத்  தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தொழிலதிபர் சின்னத்தம்பி எனும் அப்துல்காதர் கலந்து கொண்டார். சிம் மேளாவின்போது விதைப் பந்துகள் விநியோகிக்கப்பட்டன. முதல் விதைப் பந்தை பொதுமேலாளர் சி.வி. வினோத், அப்துல் காதரிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணைப் பொதுமேலாளர் என். பாஸ்கரன், காரைக்கால் கோட்டப் பொறியாளர் எம். சிவராஜ், உதவி கோட்டப் பொறியாளர் டி. அனுராதா, என்.எஃப்.டி.இ. சங்க மாவட்டச் செயலர் எம்.விஜய்ஆரோக்கியராஜ் மற்றும் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ராவணன், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆர். சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிம் விலை ரூ. 79 என்றும், பிளான் நேசம் கோல்டு என கூறி அதிகாரிகள், பொதுமக்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். திருவிழாவையொட்டி காரைக்கால் நகரில் 3 இடங்களில் சிம் விற்பனை மையம் அமைக்கப்பட்டிருந்தன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT