காரைக்கால்

அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு முகாம்

12th Jul 2019 10:16 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூலை 13) புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை இருதயம் மற்றும் இருதய அறுவை  சிகிச்சை   மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT