காரைக்கால்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்துக்கு...

6th Jul 2019 01:01 AM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மார்ச் 2019-இல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்துப் பள்ளி மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளிலும், அனைத்து ஆண் தனித் தேர்வர்கள் காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அனைத்து பெண் தனித் தேர்வர்கள் காரைக்கால் அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,  ஜூலை 10- ஆம் தேதி முதல்  25-ஆம் தேதிக்குள்அலுவலக நேரத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT