காரைக்கால்

அரசு மருத்துவமனையில் 6-இல் சிறப்பு முகாம்

4th Jul 2019 08:48 AM

ADVERTISEMENT

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் 6-ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:  காரைக்கால் அரசு பொது மருத்துவமனை உள் வளாகத்தில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் வரும் சனிக்கிழமை (ஜூலை 6) ஹார்மோன் சுரப்பி மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவுள்ளனர். காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT