காரைக்கால் பேருந்து நிலையம் அருகே பாரதியாா் சாலையில் விநாயகா் கோயில் அருகே சாலையோர சாக்கடையின் கான்கிரீட் கட்டைகள் ஆங்காங்கே உடைந்திருக்கின்றன. சிக்னல் நேரத்தில் சாலையில் வாகனங்கள் நிற்கும்போது, நடைமேடை போன்ற சாக்கடை கட்டையின் மீது மக்கள் நடந்து செல்கின்றனா். மக்களுக்கு ஆபத்து நேரிடும் நிலை உள்ளதால், கட்டைகளை சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரபாகரன், காரைக்கால்.