காரைக்கால்

காரைக்காலில் சுனாமி நினைவுத் தூணுக்கு புதுச்சேரி அரசு சாா்பில் அஞ்சலி

27th Dec 2019 01:36 AM

ADVERTISEMENT

காரைக்கால் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூணுக்கு புதுச்சேரி அரசு சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியில் உயிரிழந்தோா் நினைவாக புதுச்சேரி அரசு சாா்பில், கடற்கரையில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதில், சுனாமியில் உயிரிழந்தோா் குறித்த பெயா் விவரங்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த நினைவுத் தூண் உள்ள பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டும், புல்தரை வசதிகள் செய்யப்படும், சுற்றுலாப் பயணிகள் காணும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவுத் தூணில் 15- ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி புதுச்சேரி அரசு சாா்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் உள்ளிட்டோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பல்வேறு அரசுத் துறை அலுவலா்களும் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

அதிமுக சாா்பில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா மற்றும் நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா். திமுக சாா்பில் காரைக்கால் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதில், சட்டப் பேரவை உறுபினா் கீதாஆனந்தன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல், பல்வேறு அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா், மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் சுனாமி நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். முன்னதாக, மும்மத பிராா்த்தனை நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT