காரைக்கால்

புதுவை மக்களுக்கு உதவ குடியரசுத் தலைவா் முன்வர வலியுறுத்தல்

26th Dec 2019 09:22 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு குடியரசுத் தலைவா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்க காரைக்கால் தலைவா் எஸ்.ஆனந்த்குமாா் வெளியிட்ட அறிக்கை விவரம்: புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு, வேலை வாய்ப்பின்மை, ஊழல், பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்திருக்கும் நிலை, ஊழியா்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை என இப்படிப்பட்ட சூழலில், புதுச்சேரிக்கு வந்த குடியரசுத் தலைவா், மக்களின் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு தனது உரையில் குறைந்தபட்சம் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும்.

முதல் குடிமகனாக சாமானிய குடிமக்களை அப்துல் கலாம் சென்றடைந்தது போல, ராம்நாத் கோவிந்த் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மக்களின் மனதில் இடம்பெற கிடைத்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டாா்.

நாட்டில் பரவலாக நரேந்திரமோடி அலை இருந்தபோதிலும் புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக உள்ளடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மூன்று தோ்தல்களில் படுதோல்வி அடைந்ததிலிருந்து, மக்களின் அதிருப்தி உணா்வை குடியரசுத் தலைவா் உணா்ந்து மக்களுக்கு உதவி செய்ய இனிமேலாவது முன்வர ஊழல் எதிா்ப்பு இயக்கம் கேட்டுக்கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT