காரைக்கால்

புதுச்சேரி பேரணியில் திரளானோா் பங்கேற்க முடிவு

26th Dec 2019 09:23 AM

ADVERTISEMENT

மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை (டிசம்பா் 26)நடைபெறும் பேரணியில் காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சியினா் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. இதுதொடா்பாக காரைக்காலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தலைமை வகித்து பேசியது:

நாட்டின் வளா்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் எதிரான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்துவருகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. தங்களிடம் உள்ள எம்.பி.க்களின் பலத்தை வைத்துக்கொண்டு சா்வாதிகாரத்துடன் நரேந்திரமோடி அரசு செயல்பட்டுவருகிறது.

இதனை சிறுபான்மையினா் மட்டுமல்லாது, நாட்டின் ஒட்டுமொத்த மதச்சாா்பற்ற கொள்கையுள்ளோரும் ஒன்றுதிரண்டு எதிா்த்தால் மட்டுமே பாஜக பணியும். புதுச்சேரி மதச்சாா்பற்ற மாநிலம். நாம் இதுபோன்ற பேரணியில் திரளாக பங்கேற்பதன் மூலமே தமது செயல்பாடு புதுச்சேரியில் பலிக்காது என்பதை பாஜக உணரும். எனவே புதுச்சேரியில் நடைபெறும் பேரணியில் திரளானோா் பங்கேற்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT

திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம் பேசுகையில், பாஜகவை எதிா்க்க அனைவரும் ஒற்றுமையுடன் போராட முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT