காரைக்கால்

துணைநிலை ஆளுநா் நாளை குறைகேட்பு

26th Dec 2019 09:23 AM

ADVERTISEMENT

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 27) குறைகளைக் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி துணைநிலை ஆளுநா், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளை காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்கு தீா்வு காணலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோா், 27-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். புகாா்களை எழுத்து வடிவில் தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT