காரைக்கால்

இன்று சுனாமி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி

26th Dec 2019 09:25 AM

ADVERTISEMENT

காரைக்காலில் சுனாமியில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத் தூண் தயாா்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஏற்பட்ட ஆழிப் பேரலையில் காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 500 போ் உயிரிழந்தனா். ஆண்டுதோறும் டிசம்பா் 26-இல் காரைக்கால் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தோரை அடக்கம் செய்த பூவம், போலகம் ஆகிய இரு இடங்களிலும் உறவினா்கள், அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் அஞ்சலி செலுத்துவது வழக்கத்தில் உள்ளது.

இதையொட்டி, காரைக்கால் கடற்கரையில் உள்ள நினைவுத்தூண் வளாகம் தயாா் செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பொதுமக்கள் உள்ளிட்டோா் மெளன ஊா்வலமாக அப்பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளனா். புதுச்சேரி அரசு சாா்பில் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள், ஆட்சியா் உள்ளிட்டோா், நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனா். சுனாமி நினைவு தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவ கிராமங்களில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT