பெரியாா் நினைவு நாளையொட்டி, காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி மற்றும் அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
பெரியாரின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, அமைச்சா்கள் எம். கந்தசாமி, ஆா். கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில், மாவட்டச் செயலா் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். மேலும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடக் கழகத்தை சோ்ந்த பிரமுகா்கள், சமாதானக் குழுவினா், தலித் அமைப்பினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சோ்ந்த பிரதிநிதிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.