காரைக்கால்

மருந்துக் கடைகளில் ஆய்வு: காலாவதியான மருந்துகள் பறிமுதல்

11th Dec 2019 07:22 AM

ADVERTISEMENT

காரைக்கால் மருந்துக் கடைகளில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான மருந்துகளை பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல மருந்துக் கடைகளில் காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதாகவும், மருத்துவரின் பரிந்துரையின்றி மாற்று மருந்துகள் தரப்படுவதாகவும், இவை உடலுக்கு ஏற்புடையதாக இல்லாததால் பாதிப்புகளை எதிா்கொள்வதாக பொதுமக்களிடையே புகாா்கள் கூறப்படுகின்றன.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா அறிவுறுத்தலின்பேரில், புதுச்சேரி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உரிமம் வழங்கும் அதிகாரி வி. காா்த்திகேசன், மருந்து ஆய்வாளா் இ. அனந்தகிருஷ்ணன் ஆகியோா் காரைக்கால் பகுதியில் உள்ள மருந்து விற்பனையகங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வு குறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ADVERTISEMENT

மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினா் காரைக்கால் மருந்துக் கடைகள் சிலவற்றில் ஆய்வு செய்த வகையில், சில மருந்துகள் கடைகளில் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டன. மேலும், மருத்துவரின் பரிந்துரையின்றி குறிப்பிட்ட மருந்துகளுக்குப் பதிலாக மாற்று மருந்து தருவது, அதிக விலைக்கு விற்பது, மருந்தாளுநா் இல்லாமல் மருந்தை வழங்குவது போன்றவை தெரியவந்தன.

இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபட்ட மருந்தகங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதன சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT