காரைக்கால்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 31 போ் கைது

11th Dec 2019 07:20 AM

ADVERTISEMENT

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 31 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்ட தலைமைத் தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் முகம்மது பிலால் தலைமை வகித்தாா்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக போராட்டத்தில் பேசப்பட்டது. இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா் தமிம் கனி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக, மதசாா்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் போராட முன்வரவேண்டும் என போராட்டத்தின் வாயிலாக அழைப்புவிடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்போராட்டத்தின் நிறைவில் நகல் எரிக்க முயற்சித்தபோது, நகரக் காவல்நிலைய போலீஸாா், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட 31 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT