காரைக்கால்

காரைக்காலில் நாளை ஜிஎஸ்டி விளக்கக் கூட்டம்

6th Dec 2019 08:02 AM

ADVERTISEMENT

காரைக்காலில் சனிக்கிழமை (டிசம்பா்.7) ஜிஎஸ்டி மாதாந்திர ரிட்டன் தொடா்பான விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் வணிகவரி அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் வணிகவரி அலுவலகம் சாா்பில் டிசம்பா் 7-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கருத்தரங்க கூடத்தில், 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள ஜிஎஸ்டி புதிய மாதாந்திர ரிட்டன் படிவ இணைப்பு 1 மற்றும் 2 ஆகியவை பதிவு செய்வதற்கான விளக்கக் கூட்டம் நடைபெறவுள்றது. காலை 10 முதல் பகல் 12 மணி வரை வணிகா்கள், வணிகவரி ஆலோசகா்கள், பட்டய கணக்காளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT