காரைக்கால்

துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் நாளை குறைகேட்பு

29th Aug 2019 06:55 AM

ADVERTISEMENT

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) குறைகளைக் கேட்கவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
புதுச்சேரி துணைநிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் குறைகளைக் காணொலி மூலம் கேட்டறியும் நிகழ்வு ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்து, அதற்கு தீர்வு காணலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், 30-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். புகார்களை எழுத்து வடிவில் தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT