காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.
இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, திறமைகளை வெளிக்கொணரும் பல்வேறு விதமான போட்டிகள், பல்வேறு நாள்களில் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் மோகனா வித்யாவதி தலைமை வகித்தார். மேலும், கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 100 சதவீதம் வருகைப் பதிவு, வகுப்பு வாரியாக பாடங்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள்
வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.