காரைக்கால்

சமுதாயக் கல்லூரி ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்

27th Aug 2019 07:43 AM

ADVERTISEMENT

உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமுதாயக் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் முதல்வரின் வாக்குறுதியை ஏற்று திங்கள்கிழமை பணிக்குத் திரும்பினர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சமுதாயக் கல்லூரிகளான வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோர், தங்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த 1-ஆம் தேதி முதல் கருப்பு பட்டை அணிந்து பணி செய்து வந்தனர். கடந்த வாரம் 3 நாள்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
மாநிலத்தில் அரசால் நடத்தப்படும் 21 சமுதாயக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமியை ஆகஸ்ட் 24-ஆம் தேதி கூட்டுப் போராட்டக் குழு பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதன்பின்னர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காரைக்காலில் வழக்கமாக கல்லூரிகளில் பேராசிரியர்கள், ஊழியர்கள் திங்கள்கிழமை வந்தபோது, அந்தந்த கல்லூரிகளைச் சேர்ந்த போராட்டக் குழு பிரதிநிதிகள், முதல்வரிடம் பேசியது குறித்து விளக்கினர். 
காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் போராட்டக் குழு பிரதிநிதிகள், ஊழியர்களிடம் தெரிவித்த கருத்துகள் குறித்து கூறியது : முதல்வரிடம் பேசியபோது, ஆகஸ்ட் மாத ஊதியம் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்தப்படி தருவதாக முதல்வர்  உறுதியளித்தார். மேலும், இதுசம்பந்தமாக பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு செய்து, அரசாணை வெளியிடுவது தொடர்பாகவும் தெரிவித்தார். இதனடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து திங்கள்கிழமை காலை முதல் பணிக்குத் திரும்பியுள்ளோம். வாக்குறுதி நிறைவேற்றப்படாதபட்சத்தில் அடுத்தக்கட்டமாக கூடி விவாதித்து உரிய போராட்ட முடிவை எடுப்போம்  என கூறினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT