காரைக்கால்

நாளை சிறப்பு கிராமசபைக் கூட்டம்

23rd Aug 2019 06:52 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எஸ்.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் ஜல்சக்தி அபியான் என்கிற நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி அந்தந்த கிராமப் பஞ்சாயத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நீர் மேலாண்மை மற்றும் நீர்  சேமிப்பு தொடர்பாக செயல் திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT