காரைக்காலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் கூட்டம் காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கத்தினர், பாசனதாரர் சங்கத்தினர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.