கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கிடையேயான வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு

காரைக்கால் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த, சென்னை மண்டல அளவிலான கேந்திரிய வித்யாலயத்தின்

காரைக்கால் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த, சென்னை மண்டல அளவிலான கேந்திரிய வித்யாலயத்தின் வில்வித்தைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.  
சென்னை மண்டல அளவில் 43 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளின் மாணவ, மாணவியரிடையே பல்வேறு திறன் வளர்ப்பு போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் பெருநகரங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு, காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தின் பொறுப்பில் மண்டல அளவிலான கேந்திரிய வித்யாலயத்தின் 2 நாள் வில்வித்தைப் போட்டி, காரைக்கால் திறந்தவெளி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன் போட்டியை தொடங்கிவைத்தார். 
இந்த போட்டியில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர் பல்வேறு வயதுப்  பிரிவுகளில் பங்கேற்று, தங்களது திறனை வெளிப்படுத்தினர். கேந்திரிய வித்யாலயத்தின் உடற்பயிற்சி ஆசிரியர்கள் நடுவர்களாகப் பணியாற்றினர்.  மண்டல அளவில் 7 பள்ளிகளில் இருந்து 30 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி நிறைவு நாளான சனிக்கிழமை பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தின் முதல்வர் வி.கணேசன் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பதக்கம் மற்றும்  சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கேந்திரிய வித்யாலயத்திலிருந்து வந்திருந்த ஆசிரியர்கள், காரைக்கால் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com